ADDED : மார் 07, 2024 11:33 AM
அன்னுார்;மகா சிவராத்திரி விழா இன்று சிவன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை துவங்கி நாளை காலை 6:00 மணி வரை நான்கு கால அபிஷேக பூஜை, நான்கு கால ருத்ர யாகம், பரதநாட்டியம் கும்மியாட்டம் நடைபெறுகிறது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று இரவு 7:00 மணிக்கு துவங்கி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அன்னுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நித்திலவள்ளி தலைமையில் ஏற்பாடுகள் செய்ய கூட்டம் நடந்தது. இதில் கோவில்பாளையம் கோவில் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், ''அன்னுார் மற்றும் கோவில்பாளையத்தில் உள்ள கோவில்களில் இரவு நேரத்தில் பக்தர்கள் வருவதற்கு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அன்னுார் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர், 8ம் தேதி இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அன்னுாரில் இருந்து கணேசபுரம் கோவில்பாளையம் வழியாக கோவைக்கு இரவு முழுவதும் பஸ் இயக்கப்படும், என தெரிவித்தார்.

