/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி அதிரப்பள்ளியில் மறியல் கடைகள் அனைத்தும் அடைப்பு

ADDED : ஏப் 16, 2025 08:47 PM

வால்பாறை:வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி, கேரள மாநிலம், அதிரப்பள்ளியில் மக்கள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் ரோட்டில், சமீப காலமாக, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மளுக்கப்பாறை, வெற்றிலைப்பாறை, அதிரப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அதிரப்பள்ளி, வாழச்சல் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், தேன் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க, வனப்பகுதி பாறையில் குடிசையிட்டு தங்கியிருந்தனர்.
13ல் தேன் எடுக்க சென்ற பழங்குடியினத்தை சேர்ந்த செபஸ்டின், 20, என்பவர் யானை தாக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். 14ல் இரவு குடிசை பகுதிக்கு வந்த யானை, சதீஷ், 30. அம்பிகா, 37, ஆகியோரை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், அதிரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், யானையிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக, அதிரப்பள்ளியில் உள்ள கடைகள் அனைத்தும், நேற்று அடைக்கப்பட்டன.
பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக, அனைத்துக்கட்சி தலைவர், பொதுமக்கள் திரண்டு, அதிரப்பள்ளி - வால்பாறை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், இருமாநில போக்குவரத்து தடைபட்டது.
வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி வழியாக, சாலக்குடிக்கு இயக்கும் தனியார் பஸ், நேற்று இயக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.