/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 23, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; ஆனைமலை அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்பாட்டம், பொள்ளாச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். வட்டார தலைவர் குளோரி குணசீலி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நிவாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணை தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் தங்கபாசு உள்ளிட்டோர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆனைமலை வட்டாரத்தில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள பணி மாறுத்தல்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.