/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி ஒதுக்கியாச்சு; ரோடு பணி என்னாச்சு! 6 மாதங்களாக மக்கள் அவதி
/
நிதி ஒதுக்கியாச்சு; ரோடு பணி என்னாச்சு! 6 மாதங்களாக மக்கள் அவதி
நிதி ஒதுக்கியாச்சு; ரோடு பணி என்னாச்சு! 6 மாதங்களாக மக்கள் அவதி
நிதி ஒதுக்கியாச்சு; ரோடு பணி என்னாச்சு! 6 மாதங்களாக மக்கள் அவதி
ADDED : பிப் 22, 2024 09:08 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, பள்ளிவாசல் வீதியில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கி ஆறு மாதங்களாகியும், ரோடு போடாமல் இருப்பதால் அப்பகுதியினர் அவதி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவாசல் வீதியில், ரோடு ஆங்காங்கே சேதமடைந்திருந்தது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பகுதியில் ரோடு மற்றும் தரைப்பாலம் அமைக்க, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது வரை, இப்பகுதியில் ரோடு அமைக்கவில்லை. பூமி பூஜை போட்ட நாளில் இருந்து பத்து நாட்களுக்குள் இந்த ரோட்டை சிறிது துாரத்துக்கு பெயர்த்து எடுத்தனர். அதன்பின், ரோடு போடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த ரோட்டில் பள்ளிவாசல் இருப்பதால் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பெயர்ந்துள்ள ரோட்டில் பைக்கில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.
குடியிருப்பு பகுதி மக்கள், ரோட்டில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து செல்லும் போது தடுமாறி விழுகின்றனர். இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் பஞ்சராகி நின்று விடுகின்றன. தற்போது இந்த ரோடு முழுவதும் ஜல்லிக்கற்கள் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் இந்த வழியை தவிர்த்து வருகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி ரோடு போடும் பணியை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.