/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு விழா
/
மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு விழா
ADDED : பிப் 22, 2024 04:54 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா, நாளை காலை 10.00 மணிக்கு நடக்கிறது.
சிறப்பு விருந்தினராக, மத்திய இணையமைச்சர் முருகன் பங்கேற்கிறார். ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகிக்கிறார்.
மாற்றுத்திறன் குழந்தைகளின் யோகாசனம், உடற்பயிற்சி, கொடி அணிவகுப்பு உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. வளாகத்தில் பிசியோதெரபி, விளையாட்டு தெரபி உள்ளிட்ட பல்வேறு தெரப்பிகளின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. விழா ஏற்பாடுகள், ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது, உடல் கல்வியியல் மற்றும் யோகா புலம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.