/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி
/
முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 21, 2025 08:42 PM

பெ.நா.பாளையம்; ராமகிருஷ்ணா இன்ஜி. கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் உடற்கல்வியியல் துறை இணைந்து ஐந்தாவது ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தின. 'நாக்-அவுட்' முறையில் இப்போட்டிகள் நடந்தன. இதில், 20 அணிகள் பங்கேற்றன.
அரையிறுதி போட்டிக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி. கல்லுாரி முதலாவது முன்னாள் மாணவர்கள் அணி, ராமகிருஷ்ணா இன்ஜி. கல்லுாரி, பொள்ளாச்சி மகாலிங்கம் இன்ஜி. கல்லுாரி, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி இரண்டாவது முன்னாள் மாணவர்கள் அணி தேர்வு செய்யப்பட்டன. இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி முதலாவது மற்றும் இரண்டாவது முன்னாள் மாணவர்கள் அணி மோதின. இரண்டாவது அணி வெற்றி பெற்றது.
முன்னாள் மாணவர்கள் அஸ்வின், கார்வேந்தன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கம் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் நித்யானந்தன் செய்திருந்தார்.