ADDED : ஜன 28, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் ரத்த தானம் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கல்வி உதவி, அரசு பள்ளிகளை மேம்படுத்த உதவி என முன்னாள் மாணவர்கள் நல சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று 20க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர் நலச்சங்கத்தினர் ரத்த தானம் செய்தனர்.---