ADDED : பிப் 07, 2024 01:31 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் கைகள் கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, சமத்துார் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1998 - 99ல் பயின்ற முன்னாள் மாணவர் சங்கம், சமத்துார் ஸ்டார் அசோசியேஷன் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மாணவர்களுக்கு கை கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயிலும் மாணவ, மாணவியர் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
