/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அலுமினி லீக்' கால்பந்து போட்டி; அலுமினி - ஏ அணி அபார வெற்றி
/
'அலுமினி லீக்' கால்பந்து போட்டி; அலுமினி - ஏ அணி அபார வெற்றி
'அலுமினி லீக்' கால்பந்து போட்டி; அலுமினி - ஏ அணி அபார வெற்றி
'அலுமினி லீக்' கால்பந்து போட்டி; அலுமினி - ஏ அணி அபார வெற்றி
ADDED : ஆக 18, 2025 09:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; அண்ணா பல்கலை மண்டல மையத்தில், 'அலுமினி லீக்' கால்பந்து போட்டி நடந்தது. இதில், நான்கு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஏழு வீரர்கள் கொண்ட அணிகள், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
ஆறு 'லீக்' ஆட்டங்களை தொடர்ந்து, இறுதிப் போட்டியில் ஏ.யு.ஆர்.சி.சி.,-ஏ அணியும், அலுமினி-ஏ அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், அலுமினி-ஏ அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு, டீன் சரவணக்குமார் பரிசுகள் வழங்கினார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சரவணமூர்த்தி உடனிருந்தார்.