/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து குதுாகலம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து குதுாகலம்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து குதுாகலம்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து குதுாகலம்
ADDED : டிச 11, 2025 05:07 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1977 - 78ம் ஆண்டு (48 ஆண்டுகளுக்கு முன்) படித்த மாணவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
நடப்பாண்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், 45 முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: பள்ளி பருவகால மாணவர்கள், 24 ஆண்டுகளாக சந்திக்கிறோம். ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதியில் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். நடப்பாண்டும் பலப்பகுதிகளில் இருந்தும் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்ததனர்.
இந்த சந்திப்பின் போது, நடப்பாண்டு சிறந்த ஆசிரியருக்கான விருது இணை பேராசிரியர் மாலதி, உடல் உறுப்பு தானம் செய்த மரகதம் ரத்தினம், தொழில்வர்த்தக சபை துணை தலைவர் நாகமாணிக்கத்துக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அடுத்தாண்டு, 25வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.

