/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 10, 2025 10:33 PM

கோவை; கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது.
கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லுாரியில், 2000-ம் ஆண்டில் ஜூலை 5ல், பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களின், 25-ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் 175 பேர் பங்கேற்றனர்.
இந்த மறுகூடுகை நிகழ்வு, தாங்கள் இன்றிருக்கும் நிலையை எண்ணிப் பார்க்கும் அதே வேளையில், எங்கிருந்து தொடங்கினோம் என்பதை நினைவு படுத்தும் விதமாக அமைந்திருந்தது' என்று, மாணவர்கள் பெருமிதம் தெரிவித்தனர். தங்களுடைய இன்றைய நல்ல நிலைக்கு காரணமாக அமைந்த கல்வி நிறுவனத்துக்கு, நன்றியை தெரிவிக்கும் விதமாக, ரூ.20 லட்சம் திரள்நிதி காசோலையை, கல்லுாரி முதல்வரிடம் வழங்கினர். இந்த திரள் நிதி, கல்லுாரியின் உட்கட்டமைப்புகளையும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.