தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர் சந்திப்பு

அரசு பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர் சந்திப்பு

அரசு பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர் சந்திப்பு


ADDED : மே 18, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, ; அரசு பாலிடெக்னிக்கில், நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அரசு பாலிடெக்னிக்கின், 1997 - 2000 கல்வியாண்டில் பயின்ற, முன்னாள் மாணவர்கள் இச்சந்திப்பை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மவுன அஞ்சலி, விளக்கேற்றுதல், கல்லூரி நினைவுகளை வெளிப்படுத்தும் குறும்படம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மரக்கன்றுகள் நடுதல், குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்காத முன்னாள் மாணவர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

மாணவர்கள் நலன், கல்லூரி வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நிதி திரட்டப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட பழைய மாணவர் சங்கமான ஜி.பி.டி., முன்னாள் மாணவர் சங்கத்தின் மூலம் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 224 முன்னாள் மாணவர்கள், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us