ADDED : பிப் 10, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை அரசு கலை கல்லுாரி, புவியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நடக்கிறது.
கல்லுாரியில், 1946ல் இத்துறை துவக்கப்பட்டது முதல் படித்த முன்னாள் மாணவர்கள், துறை பேராசிரியர்கள், சாதனையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்படுகின்றனர்.
காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், இத்துறையில் பயின்று பல்வேறு பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்கள், தற்போது பணியில் இருப்பவர்கள் பங்கேற்கின்றனர். கலந்துரையாடல், இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.