தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜன 02, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்; சூலுார் ஆர்.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவ, மாணவியர், 40 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சந்தித்து மகிழ்ந்தனர்.

சூலுார் ஆர்.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், கடந்த, 1984 முதல், 1994 வரை படித்த மாணவ, மாணவியர், மீண்டும் சந்திக்க முடிவு செய்தனர். மீண்டும் பள்ளிக்கு' என்ற கருத்துரு வில், ஒருங்கிணைப்பு குழுவினர் முன்னாள் மாணவர்களுக்கு தகவல் அனுப்பினர்.

கனடா, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து, 200 க்கும் மேற்பட்டோர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட அவர்கள், ஒவ்வொருவரும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 12 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக, 1 லட்சம் ரூபாயை முன்னாள் மாணவர்கள் உடனடியாக வழங்கி நெகிழ்ந்தனர்.

ஆர்.வி.எஸ்., குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us