/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்கோட்டையா பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
செங்கோட்டையா பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : ஜன 06, 2025 01:57 AM

போத்தனூர்; கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள வி.எஸ்.எஸ்.எம்., உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நடந்தது.
1969 --- 1971 வரை, 10ம் வகுப்பு பயின்ற மாணவர்கள், 70 பேர் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் கோபால், ஜெகனாதன், வீரபத்ரன், சுந்தரம் ஆகியோருடன், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஆசிரியர் கோபால் ஆங்கிலம், புவியியல், ஜெகனாதன் அறிவியல், சுந்தரம் உயிரியல், வீரபத்ரன் கணித பாடங்களை  நடத்தினர்.
முன்னதாக, மறைந்த ஆசிரியர்கள் கணபதி, சிவன்பிள்ளை மற்றும் மறைந்த மாணவர்களுக்கு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்டட கான்ட்ராக்டர் முருகேசன், ரயில்வே ஊழியர் (ஓய்வு) பழனிசாமி தலைமை வகித்தனர்.
சண்முகம், ஜெயபால், ரசூல் உள்ளிட்டோர், நினைவுகளை பகிர்ந்தனர். நிறைவாக, குழு புகைப்படம் எடுத்து, மதிய விருந்துடன் அனைவரும் விடைபெற்றனர்.
கான்ட்ராக்டர் முருகேசன் கூறுகையில், ''கடைசியாக, 2013ல் அனைவரும் சந்தித்தோம். கொரோனா தொற்றால், அதன் பின் சந்திக்க முடியவில்லை.  இடைப்பட்ட காலத்தில் சிலர் நிரந்தரமாக பிரிந்தனர்.
''இப்போதைய இந்த சந்திப்பில், மீண்டும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி,'' என்றார்.

