ADDED : ஏப் 07, 2025 10:00 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள பன்னிமடை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா நடந்தது.
இப்பள்ளியில் கடந்த, 1996 முதல், 2003 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சங்கம சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. காலையில் ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து தேநீர் விருந்து, விழாவில் ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும், ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய பள்ளிக்கால நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து குழு போட்டோ, மதிய உணவு, குழந்தைகளுக்கான சிறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.