ADDED : ஆக 25, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
வித்யாலயா பாலிடெக்னிக்கில் கடந்த, 97ம் ஆண்டு முதல், 2000 வரை டிப்ளமோ சிவில் பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி காரமடை அருகே உள்ள தனியார் விடுதியில் நடந்தது. விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து, தங்களுடைய பாலிடெக்னிக் கல்லூரி கால நினைவுகளையும், நினைவு பரிசுகளையும் பகிர்ந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.