தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஏப் 05, 2026 08:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 08:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் 46 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

கோவை மாவட்டம் காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1979 -1981 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு கணித பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 46 ஆண்டுகளுக்கு பின் காரமடை உள்ள தனியார் ஹாலில் குடும்பத்துடன் ஒன்று கூடினர். விழாவிற்கு அப்போதைய இயற்பியல் ஆசிரியர் துரைசாமி, ஆங்கில ஆசிரியர் ஆறுமுகம், கணித ஆசிரியர் திருவேங்கடசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் உற்சாகமான வரவேற்பு தந்தனர். மேலும், தங்களுடன் படித்து தற்போது காலமாகி போன நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் கந்தசாமி, ஞானசேகரன் முரளி கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மணிகண்டராஜ் நன்றி கூறினார்.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us