தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 39 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

39 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

39 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : செப் 23, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம் : சின்னதடாகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1985---86 ம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 39 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தனர்.

சின்னதடாகம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1985-86 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு படித்த, 20 மாணவியர் உட்பட, 40 மாணவர்கள் துடியலூரில் உள்ள திருமண மண்டபத்தில் சந்தித்து, தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சிற்பிகளுக்கு சிலைகள் நன்றி செலுத்தும் விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. மூத்த ஆசிரியர் துரைசாமி தலைமை வகித்தார். இதில், பாண்டிச்சேரி அருள் வளர் சிவம் அறக்கட்டளையை சேர்ந்த சாந்தகுமார் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, தங்களுடைய பள்ளி காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும், அனுபவங்களையும் நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். விழாவில், 27 ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

விழாவில், ஆண்டுதோறும், சின்னதடாகம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும், பிளஸ், 2 வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us