/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; வகுப்பறைக்கு வர்ணம் தீட்ட முடிவு
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; வகுப்பறைக்கு வர்ணம் தீட்ட முடிவு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; வகுப்பறைக்கு வர்ணம் தீட்ட முடிவு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; வகுப்பறைக்கு வர்ணம் தீட்ட முடிவு
ADDED : டிச 30, 2024 12:12 AM

அன்னுார்; முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், வகுப்பறைகளுக்கு வர்ணம் தீட்ட முடிவு செய்யப்பட்டது.
அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2001 முதல் 2003 வரை, பிளஸ் 1, பிளஸ் 2, தொழிற்கல்வி வகுப்பில், 67 பேர் படித்தனர். இவர்கள் பள்ளியில் ஒன்றாக சந்தித்து பள்ளிக்கு உதவ முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் 45 பேர் பங்கேற்றனர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், 'ஐந்து ஆண்டுகளுக்கு முன் சந்தித்தபோது, பள்ளிக்கு தேவையான சேர், பீரோ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
தற்போது பள்ளியின் வடக்கு பகுதியில் உள்ள வகுப்பறைகளுக்கு வர்ணம் தீட்ட பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதன்படி வர்ணம் தீட்டும் பணி துவங்கி உள்ளது.
மேலும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற 45 பேரில் ஆறு பேர் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சிலர் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை தெரிவித்தனர். மீண்டும் அடுத்த ஆண்டு சந்திக்க முடிவு செய்யப்பட்டது.