ADDED : ஜன 19, 2026 06:08 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.
* பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அமாவாசை நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
*ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*குரும்பபாளையம் மாரியம்மன் கோவில் நேற்று, சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*பொள்ளாச்சி அழகு நாச்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
