/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் போட்டியில் அசத்திய வீரர்கள்
/
வாலிபால் போட்டியில் அசத்திய வீரர்கள்
ADDED : நவ 27, 2025 04:53 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூரில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு வாலிபால் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
கிணத்துக்கடவு - வடசித்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, வாலிபால் போட்டி, இரண்டு நாட்கள் நடந்தது.
நிகழ்ச்சியில், தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், கிணத்துக்கடவு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் அல்தாப் உசேன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியில், 20க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்று விளையாடினர். இதில், முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய், கோப்பையை எப்.வி.சி., அணி வென்றது.
இரண்டாம் பரிசு, 7 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை ராமகிருஷ்ணா கல்லூரி அணியும், மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் ரூபாய், கோப்பையை சக்தி கல்லூரி அணியும், நான்காம் பரிசுக்கான கோப்பையை வி.எஸ்.ஆர்., பீனிக்ஸ் அணியும் வென்றன.
போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய், கோப்பை வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கிணத்துக்கடவு மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கீர்த்தி ஆனந்த் செய்திருந்தார்.

