/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கொடிசியாவில்'அதிசய கடல் உலகம்'
/
கோவை கொடிசியாவில்'அதிசய கடல் உலகம்'
ADDED : ஜூலை 09, 2025 11:16 PM

கோவை; கோவை கொடிசியா மைதானத்தில் நடந்து வரும் 'அண்டர் வாட்டர் டனல் அக்வாரியம்' கண்காட்சி, பொதுமக்களின் ஆதரவை பெற்ற நிலையில், கண்காட்சி நடக்கும் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கண்காட்சி மேலாளர் கூறியதாவது:
முழுவதும் குளிரூட்டப்பட்ட 'அண்டர் வாட்டர் டனல் அக்வாரியம்', கோவை கொடிசியா மைதானத்தில் நடந்து வருகிறது. மக்களுக்கு புதுவித அனுபவம் தரும் வகையில், அழகிய மற்றும் அரிய வகை பறவைகள், விலங்குகளை, சுதந்திரமாக திறந்த வெளியில் கண்டுகளிப்பதுடன், 'போட்டோ' எடுத்தும் மகிழலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் விளையாடி மகிழும் வகையில், 'ரோபோடிக்' நாய்க்குட்டிகள், வெளிநாடுகளின் விளையாட்டு, கடல்படுகையின் வண்ணமய காட்சிகள், மனிதர்களை நேசிக்கும் கடல் தேவதைகளான கடல் கன்னிகள், லட்சக்கணக்கான மீன்களை கொண்ட சுரங்கங்களை பார்க்கலாம். படகில் ஏறி பயணிக்கலாம்; கடல் தாயின் அரண்மனையை கண்டு ரசிக்கலாம்.
சமையலறை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை, 10 ரூபாய் முதல் வாங்கலாம். 70 சதவீத தள்ளுபடி விலையில், வீட்டுக்கு தேவையான மெத்தை, பர்னிச்சர் பொருட்களை மிகக்குறைந்த விலையில் வாங்கிச் செல்லலாம். கார், டூவீலர்கள் 'பார்க்கிங்' செய்ய, தேவையான அளவு 'பார்க்கிங்' இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வார நாட்களில், மதியம் 2:00 முதல், இரவு, 10:00 மணி வரை. விடுமுறை நாட்களில் காலை, 11:00 முதல், இரவு, 10:00 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.