ADDED : நவ 02, 2025 11:14 PM

மேட்டுப்பாளையம்:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2025--26 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு விழா  நடைபெற்றது.
விழாவில், பள்ளியின் விளையாட்டுத் துறை தலைவர் மாணவர் நித்திஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் அம்பாள் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலர் கீதா சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் இயக்குனர் பிரதிக்ஷா, முதல்வர் திருமூர்த்தி ஆகியோர் பரிசு பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டிப் பேசினார்கள். சிறப்பு விருந்தினராக சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
விழாவில் யோகா, ஜூம்பா, கராத்தே, பிரமிட் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை அக்னி அணி வென்றது.

