/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலை பணி: நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு
/
நான்கு வழிச்சாலை பணி: நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு
ADDED : நவ 02, 2025 11:15 PM

அன்னுார்: அவிநாசி-மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை பணியின் தரத்தை, நெடுஞ்சாலை துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் தலா 10 மீ., அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிறு பாலம் மற்றும் பெரிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சாலை பணியின் தரத்தை ஆய்வு செய்ய சென்னை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று முன்தினம் அன்னுார் வந்தார். அன்னுார், அவிநாசி சாலையில், ஊத்துப்பாளையத்தில், மைய தடுப்பிலிருந்து இருபுறமும் சாலையின் அகலம் அளக்கப்பட்டது. சாலையின் தடிமன், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
'நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்,' என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில் நெடுஞ்சாலை துறை கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் (கட்டுமானம்) ஞானமூர்த்தி, கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) சித்ரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

