ADDED : ஏப் 14, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; பா.ஜ., சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சட்ட மேதை, டாக்டர் அம்பேத்கரின், 135 வது பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், அன்னுாரில் நேற்று நடந்தது. வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து, அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவர் பேசுகையில், பல நூறு கோடி ரூபாய் செலவில், அம்பேத்கருக்கு பா.ஜ., அரசு நினைவிடங்கள் ஏற்படுத்தியுள்ளன. ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு பல திட்டங்களை செயல்படுத்தியது மத்திய பா.ஜ., அரசு தான், என்றார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஈஸ்வரன், மாவட்ட நிர்வாகி இராஜராஜ சாமி உள்பட, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.