ADDED : ஏப் 27, 2025 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா அன்னுார் யூ.ஜி., மகாலில் நேற்று நடந்தது.
விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,அம்பேத்கர் வழியில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கு பா.ஜ., பல பணிகளை செய்துள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு, 12 கோடி வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
பா.ஜ வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, அவிநாசி, மேட்டுப்பாளையம், சூலூர் தொகுதியைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் தேசிய தலித் முன்னணி ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், விக்னேஷ், செந்தில், ஒன்றிய தலைவர் ஆனந்தன் உள்பட மூன்று தொகுதிகளைச் சேர்ந்த 500 பேர் பங்கேற்றனர்.

