/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் கண்டக்டரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
/
பஸ் கண்டக்டரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
ADDED : ஜூன் 10, 2025 09:56 PM
கோவை; திருச்சி சாலையில் நின்று கொண்டிருந்த பஸ் கண்டக்டரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
சுந்தராபுரம், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 29; தனியார் பஸ் கண்டக்டர். இவர், திருச்சி சாலை, ரெயின்போ பஸ் ஸ்டாப் அருகில் பஸ்சை பார்க் செய்வது வழக்கம். கடந்த 9ம் தேதி இரவு, பஸ்சை 'பார்க்' செய்து விட்டு அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரான மனோஜ், 24, பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம், தனது ஆம்புலன்சை நிறுத்தி வைக்கும் இடம் எனவும், அந்த இடத்தில் பஸ்சை கழுவி இடத்தை அசுத்தம் செய்து விட்டதாகவும் கூறி, ஹரிகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அவர் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஹரிகிருஷ்ணனை தாக்கினார்.
இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.