/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
/
மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
ADDED : நவ 25, 2025 05:46 AM
நெகமம்: நெகமம் அருகே உள்ள, செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் திருமலைராஜன், 80, வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்தார். இந்நிலையில், இவரது இறுதி சடங்குக்கு, பொள்ளாச்சி திரு.வி.க நகரை சேர்ந்த சதீஸ்குமார், 20, என்பவரிடம் பிரீசர் பாக்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் பதிவு செய்திருந்தனர்.
பிரீசர் பாக்ஸ்க்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் சதீஷ்குமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

