/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்க பருத்தி ரகமும் பரீட்சார்த்த முயற்சியும்
/
அமெரிக்க பருத்தி ரகமும் பரீட்சார்த்த முயற்சியும்
அமெரிக்க பருத்தி ரகமும் பரீட்சார்த்த முயற்சியும்
அமெரிக்க பருத்தி ரகமும் பரீட்சார்த்த முயற்சியும்
ADDED : டிச 06, 2025 06:07 AM
கோ ட்டை ஈஸ்வரன் கோவிலுக்கும், பெரியகடைத் தெருவுக்கும் நடுவில் இருந்த பரந்த காலியிடம், ஒரு காலத்தில் வீணாகக் கிடந்த நிலம் மட்டுமே. ஆனால் 18ம் நுாற்றாண்டின் மறுபாதியில், அங்கிருந்து கோவையின் பருத்தி வரலாற்றை மாற்றிய முக்கிய நிகழ்வுகள் தொடங்கின.
கோவையை சுற்றிய கரிசல் நிலம் பருத்தி விளைவுக்கு சிறந்ததால், இங்கு நாட்டுத் தரப் பருத்தி மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. ஆனால், அக்காலத்திய ஆங்கிலேய அதிகாரிகள் வெளிநாட்டு பருத்தி ரகங்களை வளர்த்தால், அதிக வருவாய் கிடைக்கும் என நம்பினர்.
1819ல் சேலத்தில் பணியாற்றிய ராபர்ட் ஹீத் என்ற வியாபார அதிகாரி, போர்போன் என்ற வெளிநாட்டு பருத்தி வகையை, கோவையில் நட்டுப் பார்க்க உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு, தாராபுரம் தாலுக்காக்களில், 'பிஷர் அண்ட் கோ' நிறுவனம் பெரிய கிடங்குகள் அமைத்து, பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டது. இந்த முயற்சி நீடிக்காமல் அந்த நிறுவனம் மூடப்பட்டது.
பின், 1840ல் அமெரிக்கா பருத்தி ரகத்தை கோவையில் வளர்க்க முயற்சி தொடங்கப்பட்டது. அதற்காக டாக்டர் வைட் நியமிக்கப்பட்டு, கோவையில் பெரிய கிடங்கு அமைப்பதற்காக லட்சக்கணக்கில் செலவிடப்பட்டது. ஆனால் பருவநிலை மாற்றங்கள், ஆர்வமின்மை காரணமாக, ஆராய்ச்சி எதிர்பார்த்த பலனை தரவில்லை. 1841 முதல் 1849 வரை பருத்திக் கிடங்காக இருந்த அந்த கட்டடம், பின்னர் ஆய்வுகள் கைவிடப்பட்டதும், பிற பணி பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டது.
இதே வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட அந்த கட்டடத்தில் தான், இன்று டவுன்ஹாலில் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்படுகிறது.

