/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மண் தினத்தில் முகத்தில் மண் பூச்சு
/
உலக மண் தினத்தில் முகத்தில் மண் பூச்சு
ADDED : டிச 06, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: வெள்ளலூரிலுள்ள பட்டாம் பூச்சி பூங்காவில், உலக மண் தினம் முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நேற்று நடந்தது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசுகையில், வனத்தில் மண் வளம் இருந்தால்தான், மரங்கள் வளரும். விலங்குகள் நடமாட்டம் காணப்படும். மழை பெய்யும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், கணுவாய் அவனி பள்ளி மாணவர்கள், 120 பேர் மண்ணை நேசிக்கும் வகையில் முகத்திலும், கைகளிலும் மண் பூசி மகிழ்ந்தனர். பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட்டு சென்றனர்.

