தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூலி உயர்வை எதிர்பார்க்கும் அம்மா உணவக ஊழியர்கள்

 கூலி உயர்வை எதிர்பார்க்கும் அம்மா உணவக ஊழியர்கள்

 கூலி உயர்வை எதிர்பார்க்கும் அம்மா உணவக ஊழியர்கள்


ADDED : ஜன 24, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என, அம்மா உணவக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகர் புதுமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில், 12 பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். காலை நேரத்தில் இட்லி, மதியம் சாம்பார், பொறியலுடன் உணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தினக்கூலியாக, 325 ரூபாய் வழங்கப்படுகிறது.

கொரோனா காலகட்டத்திலும், வால்பாறையில் அம்மா உணவகம் விடுமுறையின்றி செயல்பட்டது. அம்மா உணவக ஊழியர்களுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களை விட குறைவான கூலி வழங்கபடுகிறது. அவர்களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:

அம்மா உணவகம் துவங்கி பத்து ஆண்டுகளாகிறது. தினமும், காலை, 6:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை பணி செய்கிறோம். மக்களுக்கு சிறந்த முறையில் காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் வழங்குகிறோம்.

உணவத்தில் அரசு ஊழியர்கள் முதல் சாதாரண ஏழை மக்கள் வரை அனைவரும் சாப்பிடுகின்றனர். அம்மா உணவகத்தில் எங்களது வேலைப்பளுவை கருத்தில் கொண்டு, தினக்கூலியாக 500 ரூபாய் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us