/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மா உணவகத்தில் வசதிகள் இன்றி அவதி
/
அம்மா உணவகத்தில் வசதிகள் இன்றி அவதி
ADDED : செப் 18, 2024 08:41 PM
வால்பாறை : வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில், அம்மா உணவகம் செயல்படுகிறது. இங்கு, காலை இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உணவகத்தை ஏழை, எளிய மக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் பயன் படுத்துகின்றனர்.
இந்நிலையில், மழை காலத்தில் மேற்கூரை சில இடங்களில் ஒழுகுவதால் டைல்ஸ் அமைக்கப்பட்டுள்ள தரைதளம் முழுவதும் மழைநீர் தேங்கி விடுகிறது. உணவு சாப்பிட வரும் மக்கள் வழுக்கி விழும் சூழல் உள்ளது. உணவகத்தின் பின்பக்கம் உள்ள குழாய் உடைந்த நிலையில், கழிவுநீர் மார்க்கெட் கடை வீதி வழியாக செல்வதால், துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் உள்ள, அம்மா உணவகத்தில் மின்விளக்கு, மின்விசிறி இயங்குவதில்லை. டைல்ஸ் உடைந்த நிலையில் காணப்படுகிறது. கை கழுவும் குழாய் சேதமடைந்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என்றனர்.