/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் திருவிழாவில் அம்மன் அழைப்பு
/
பொங்கல் திருவிழாவில் அம்மன் அழைப்பு
ADDED : ஜூலை 23, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; பொகலூரில் நூறாண்டுகள் பழமையான வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் திருவிழா இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது. நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. பாரம்பரிய முறைப்படி, உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு, அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடி, மழை வேண்டியும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது.