'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் வரும் 21 முதல் துவக்கம்
'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் வரும் 21 முதல் துவக்கம்
ADDED : மார் 14, 2026 06:48 AM

கோவை: புதிய போத்தனுார்-தன்பாத் ரயில்(16619) சனிக்கிழமை தோறும், தன்பாத்-போத்தனுார் ரயில்(16620) திங்கள்தோறும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 21 முதல் போத்தனுாரில் இருந்து சனிதோறும் காலை 6:15க்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் திங்கள் அதிகாலை 4:00க்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். வரும் 23 முதல் திங்கள் தோறும் மதியம் 2:00க்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் ரயில், புதன் காலை 11:20க்கு போத்தனுார் வந்தடைகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, நெல்லுார், சாம்பல்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
எட்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் உட்பட 22 பெட்டிகள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
