/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் அரசு மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் கூடுதல் கட்டடம்
/
அன்னுார் அரசு மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் கூடுதல் கட்டடம்
அன்னுார் அரசு மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் கூடுதல் கட்டடம்
அன்னுார் அரசு மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : பிப் 17, 2025 10:34 PM
அன்னுார்; அன்னுார் அரசு மருத்துவமனையில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நேற்று துவங்கியது.
அன்னுார் அரசு மருத்துவமனையில், 58 படுக்கைகள் உள்ளன. தினமும் 450 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சித்த மருத்துவ பிரிவு மற்றும் சிறு அறுவை சிகிச்சை கூடம் உள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இது போதுமானதாக இல்லை. அன்னுார் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரி வந்தனர். இந்நிலையில், 15வது நிதி குழு மானியத்தில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் அறுவை சிகிச்சை கூடம், டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு, கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி நேற்று துவங்கியது.
கோவை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர் தேவசேனா ஆகியோர் முன்னிலையில், நீலகிரி எம்.பி., ராஜா பணியை துவக்கி வைத்தார்.
டாக்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதே போல் குருக்கிளையம் பாளையத்தில் ரேஷன் கடை கட்டிடம், அன்னுார் பேரூராட்சி, நான்காவது வார்டில் தார் சாலை, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
கிளை நூலகத்தில், 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை ஆய்வு செய்தார்.