/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2024 01:00 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பொள்ளாச்சி புளியம்பட்டியில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் நிர்வாகி அப்பாவு ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் மதுசூதன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட துணை தலைவர் காளப்பன், துணை செயலாளர் ரவீந்திரன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
கிளை செயலாளர் பரமசிவம், ஜமீன்ஊத்துக்குளி கிளை செயலாளர் காந்திராஜன், கூளநாயக்கன்பட்டி அனைத்துசமய அறக்கட்டளை நிலத்தை பயன்படுத்துவோர் சங்க கிளை தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் நிலமட்டத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். 15 அடி உயரத்தில் கொட்டிய மண்ணை உடனே அகற்ற வேண்டும். வழித்தடம் இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பாதை அமைக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைக்கு நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் நிவாரணம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

