sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோர்ட் வளாகத்தில் இ - பைலிங் சேவை மையம் ஐகோர்ட் உத்தரவின்படி விரைவில் அமைகிறது

/

கோர்ட் வளாகத்தில் இ - பைலிங் சேவை மையம் ஐகோர்ட் உத்தரவின்படி விரைவில் அமைகிறது

கோர்ட் வளாகத்தில் இ - பைலிங் சேவை மையம் ஐகோர்ட் உத்தரவின்படி விரைவில் அமைகிறது

கோர்ட் வளாகத்தில் இ - பைலிங் சேவை மையம் ஐகோர்ட் உத்தரவின்படி விரைவில் அமைகிறது


ADDED : மார் 06, 2024 09:06 PM

Google News

ADDED : மார் 06, 2024 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற வளாகத்தில், இ - பைலிங் சேவை மையம் அமைக்கப்படுகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யப்படும் நடை முறை மாற்றப்பட்டு, இ- கோர்ட் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான வழக்குகளையும், இ- பைலிங் முறையில் தாக்கல் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்தாண்டு செப்., முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

முன்ஜாமின் மனுக்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வாடகை கட்டுப்பாடு, மேல்முறையீடு, மறுசீராய்வு மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், தனிநபர் புகார், கிரிமினல் வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல், குற்ற வழக்கு மேல்முறையீடு மற்றும் மறுசீராய்வு மனுக்களும், இ-பைலிங் முறையில் தாக்கல் செய்து வருகின்றனர்.

குடும்ப வன்முறை மற்றும் குடும்ப நல வழக்குகள், சிவில் வழக்குகளில், இ-பைலிங் முறையில் மனு தாக்கல் செய்யும் முறை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இ-பைலிங் வாயிலாக, வழக்கு தாக்கல் செய்யும் முறையை நிறுத்தி வைக்க கோரி, வக்கீல் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

வக்கீல்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகே, இப்புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். ஆனாலும், இ-பைலிங் முறையினை பின்பற்றுவதில் நீதித்துறை நிர்வாகம் அதிக முனைப்பு காட்டியது.

இந்நிலையில், வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு, இ-பைலிங் வழக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சந்தேகம் மற்றும் சிக்கலுக்கு தீர்வு காண, நீதிமன்ற வளாகத்தில், 'இ-பைலிங் சேவை மையம்' அமைக்க, ஐகோர்ட் முடிவு செய்தது.

கோவை மாவட்டத்தில், அனைத்து நீதிமன்ற வளாகத்தில் இ-பைலிங் சேவை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பார்க்கிங் பகுதிகளில் ஆறு இடங்களில், சேவை மையம் அமைக்கப்படுகிறது.

இதே போல, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை கோர்ட் வளாகத்திலும் சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.

தற்காலிக செட் அமைக்கப்பட்டு, அலுவலகம் செயல்பட உள்ளது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இ-பைலிங முறையில், வழக்கு தாக்கல் தொடர்பாக வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள், சேவை மையம் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், அனைத்து நீதிமன்ற வளாகத்தில் இ- பைலிங் சேவை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பார்க்கிங் பகுதிகளில் ஆறு இடங்களில், சேவை மையம் அமைக்கப்படுகிறது.

இதே போல, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை கோர்ட் வளாகத்திலும் சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us