/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூழாங்கல் ஆற்றுப்படுகைக்கு தாகம் தணிக்க வந்த யானை
/
கூழாங்கல் ஆற்றுப்படுகைக்கு தாகம் தணிக்க வந்த யானை
ADDED : மார் 24, 2025 11:13 PM

வால்பாறை; சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், பகல் நேரத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றையானையை சுற்றுலாபயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் கோடை மழைக்கு பின், தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், வன விலங்குகள் குடிநீர் மற்றும் உணவுக்காக இடம் பெயர்கின்றன. குறிப்பாக, வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் அதிகளவில் பகல் நேரத்தில் தண்ணீரை தேடி செல்கின்றன.
சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் பகல் நேரத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றையானையை சுற்றுலாபயணியர் கண்டு ரசித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் வனவளம் பசுமையாக இருப்பதால், வனவிலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றன. குறிப்பாக, நீர்நிலைகளில் பகல் நேரத்தில் தண்ணீர் குடிக்க யானைகள் வந்து செல்கின்றன.
இது போன்ற சூழ்நிலையில், சுற்றுலா பயணியர் யானையின் அருகில் செல்ல கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.