/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாட்டை காக்கும் பொறுப்பு பொறியாளருக்கு இருக்கிறது'
/
'நாட்டை காக்கும் பொறுப்பு பொறியாளருக்கு இருக்கிறது'
'நாட்டை காக்கும் பொறுப்பு பொறியாளருக்கு இருக்கிறது'
'நாட்டை காக்கும் பொறுப்பு பொறியாளருக்கு இருக்கிறது'
ADDED : செப் 25, 2024 10:34 PM

கோவை : பி.ஏ.ஐ., கோவை மையம் சார்பில் பொறியாளர்கள் மூன்று பேருக்கு, சிறந்த பொறியாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா(பி.ஏ.ஐ.,) கோவை மையம் சார்பில், 'பொறியாளர் தினம்' நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்ட இயக்குனர் (ஓய்வு) சிவலிங்கம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்(சாலை பாதுகாப்பு) மனுநீதி, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் அருமைராஜ் ஆகியோருக்கு, சிறந்த பொறியாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
பி.ஏ.ஐ., தலைவர் லக்ஷ்மணன் பேசுகையில், ''நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர் பங்களிப்பு மகத்தானது. கட்டுமானங்கள், கண்டுபிடிப்புகள் என புவியை மாற்றி அமைப்பவர்கள், இன்று விண்வெளியை நோக்கி பயணிக்கின்றனர்,'' என்றார்.
விருது பெற்ற சிவலிங்கம் ஏற்புரையாற்றுகையில், 'இத்திட்டமானது தனி மனித முயற்சி மட்டும் அல்ல; பல்வேறு அரசு துறைகளின் கூட்டு முயற்சி. குறிப்பாக, பொறியாளர்கள் பங்களிப்பு மகத்தானது. இந்தியாவை உருவாக்குவது மட்டுமின்றி, காக்கும் பொறுப்பும் பொறியாளர்களுக்கு உண்டு,'' என்றார்.
மனுநீதி ஏற்புரையாற்றுகையில்,''நேரம் மிகவும் முக்கியமானது. சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'யு டேர்ன்' அமைத்துள்ளோம். மக்கள் ஏற்றுக்கொண்டதால் இதில் வெற்றி கிடைத்தது,'' என்றார்.
அருமைராஜ் ஏற்புரையாற்றுகையில், ''வேலையை வேலையாக மட்டும் கருதாமல், நம்மை நாடி வருபவர்களுக்கு நன்மையாக முடிக்க வேண்டும்,'' என்றார்.
பி.ஏ.ஐ., தேசிய தலைவர் விஸ்வநாதன், செயலாளர் பிரசாத் சக்ரவர்த்தி, பொருளாளர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

