/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சூழலை ஏற்படுத்தும் நிகழ்வு
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சூழலை ஏற்படுத்தும் நிகழ்வு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சூழலை ஏற்படுத்தும் நிகழ்வு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சூழலை ஏற்படுத்தும் நிகழ்வு
ADDED : மார் 06, 2024 09:26 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏதுவான பள்ளி சூழலை ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உள்ளடங்கிய கல்வி சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை பள்ளியில் ஏற்படுத்தும் விதமாக, 'இணைவோம், மகிழ்வோம்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி, வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை, உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெவ்வேறு பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர் குழுக்களாக பிரிந்து விளையாடினர்.புதிர் விளையாட்டு, நடித்து விளையாட்டு மற்றும் பலுான் விளையாட்டு ஆகியவற்றை இணைந்து மகிழ்ந்து விளையாடினர்.
போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி தெற்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் லதா, கார்மல், மேகனா, முகிலன் ஒருங்கிணைத்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறுகையில், 'மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுடன் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் சூழலை ஏற்படுத்தும் போது, அவர்களின் சம வாய்ப்பும், பங்களிப்பும் உறுதி செய்யப்படுகிறது.
இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில், அனைவரின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன,' என்றனர்.

