/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் பரிசோதனை அவசியம்; மருத்துவ முகாமில் தகவல்
/
கண் பரிசோதனை அவசியம்; மருத்துவ முகாமில் தகவல்
ADDED : அக் 28, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: வடக்கலுார், சமுதாய நலக்கூடத்தில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வடக்கலூர் நேரு இளைஞர் நற்பணி மன்றம், சிறுமுகை லயன்ஸ் கிளப் மற்றும் இம்மானுவேல் கண் நோய் நிவாரண குழு சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமில் கண் மருத்துவர்கள் பேசுகையில், 'உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்றனர். முகாமில், 102 பேருக்கு, துாரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், கண் புரை உள்ளிட்ட கண் நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 20 பேர் அறுவை சிகிச்சைக்கு, தேர்வு செய்யப்பட்டனர்.