/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல், மனம் மேம்படுத்தும் புதுமை விளையாட்டு
/
உடல், மனம் மேம்படுத்தும் புதுமை விளையாட்டு
ADDED : நவ 24, 2024 11:44 PM

கோவை; இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்பதாவது விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில், மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடினார்கள். மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், பல புதுமையான விளையாட்டுகள் நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி பேசுகையில், ''மனல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாணவர்கள், ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு மாணவர்களிடையே ஒழுக்கம், விடாமுயற்சி, குழுபணி ஆகிய பண்புகளை வளர்க்கும்,'' என்றார்.
போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் பிரியா, இந்துஸ்தான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சதிஷ்பிரபு, இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் நிர்வாகி யமுனா ஆகியோர் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.