ADDED : ஜூன் 01, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர் :வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, 'முழுமை நல வாழ்விற்கு, மனவளக்கலை யோகா,' என்னும் 12 நாள் பயிற்சி வகுப்பு, அன்னூரில் இன்று துவங்குகிறது.
அன்னூர் அ.மு.காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு இலவச அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இதில் உடல் நலம், ஆரோக்கியத்துடன் வாழ எளிய முறை உடற்பயிற்சி, மன அமைதியுடன் வாழ தவ பயிற்சி, நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ, காயகல்ப பயிற்சி கற்றுத் தரப்படும்.
தொடர்ந்து, 12 நாட்கள் மாலை 4:00 முதல், 6:00 மணி வரை பயிற்சி நடைபெறும். 'ஆர்வமுள்ளோர் 95780 02112, 97899 88949 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.