/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும்
/
பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும்
பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும்
பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும்
ADDED : மார் 18, 2025 04:35 AM

மேட்டுப்பாளையம்: பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி, இடியும் நிலையில் உள்ளதால், புதிதாக குடிநீர் தொட்டி கட்ட, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் மூன்றாவது வார்டில், பாலப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், அம்பேத்கர் நகர், துர்கா அவென்யூ ஆகிய குடியிருப்புகளுக்கு, எம்.ஜி.ஆர்., நகர் கோவில் அருகே உள்ள, இரண்டு மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒன்றில் நல்ல தண்ணீரும், மற்றொன்றில் உப்புத் தண்ணீரும் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் உப்பு தண்ணீர் சேமிக்கும் தொட்டி கட்டி, பல ஆண்டுகளுக்கும் மேலானதால், தொட்டியின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டும், செடிகள், மரங்கள் முளைத்துள்ளன. இது குறித்து பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் பகுதி மக்கள் கூறுகையில், 'கோவில் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி, பல ஆண்டுகள் ஆனதால், உடையும் நிலையில் உள்ளது.
எனவே தொட்டியை இடித்து விட்டு, புதிதாக மேல்நிலை தொட்டி கட்ட, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலர் பிரபு கூறுகையில், ''பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் பழைய மேல்நிலை தொட்டியை இடித்து விட்டு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலைத் தொட்டி கட்டவும், 300 மீட்டருக்கு குடிநீர் குழாய் பதிக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பழைய தொட்டியை இடித்து விட்டு, புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.