/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்டர் மீடியனில் எரியாத மின்விளக்கு
/
சென்டர் மீடியனில் எரியாத மின்விளக்கு
ADDED : டிச 24, 2024 10:32 PM
பொள்ளாச்சி; கோவை ரோட்டில், சென்டர் மீடியன் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் சரிவர எரியாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து, கோவை செல்லும் பிரதான ரோட்டில், சி.டி.சி., மேடு வரை, சென்டர்மீடியன் இடையே மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவ்வப்போது, இரவில் இந்த மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
சாலை திருப்பங்களை விரைந்து அறிந்து கொள்ள முடியாத வாகன ஓட்டுநர்கள், திடீரென வாகனங்களை நிறுத்த முற்படுவதால் விபத்தும் ஏற்படுகிறது. இரவு, 11:00 மணி வரை, வாகனங்களின் இயக்கம் இருப்பதால், துறை ரீதியான அதிகாரிகள் பராமரிப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: ஆச்சிப்பட்டி வரையிலான ரோட்டின் நடுவே உள்ள சென்டர்மீடியனில், குறிப்பிட்ட இடைவெளியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். ஆச்சிப்பட்டி அருகே மின்விளக்கு இல்லாததால், அங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ரோடு மோசமாக இருப்பதால், வாகனங்களை சீராக இயக்க முடிவதில்லை. அதேபோல, நகரில், கோவை மற்றும் பாலக்காடு ரோட்டில், சென்டர்மீடியன் அமைத்து, மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.