ADDED : ஏப் 19, 2026 08:39 PM
ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏப்ரல் 21 கொப்பரை மற்றும் இதர விளை பொருட்களுக்கான மறைமுக ஏலம் நடைபெறாது என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொ) ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (21ம் தேதி) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்குழுவில் நடைபெறவிருந்த தேங்காய், கொப்பரை மற்றும் இதர விளை பொருட்களுக்கான மறைமுக ஏலம் நடைபெறாது.
தேர்தல பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள், வியாபாரிகள், இந்த மாற்றத்தை கவனித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மீண்டும் அடுத்த ஏலம் நடைபெறும் தேதி குறித்த விபரங்கள் பின்னர் அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
