அலசி, ஆராய்ந்து பாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஓட்டு
அலசி, ஆராய்ந்து பாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஓட்டு
ADDED : பிப் 24, 2026 05:13 AM

54 ஆண்டுகளாக அரசியலில் பயணித்து வரும் அன்னுார், பனந்தோப்பு மயில் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி:
அ.தி.மு.க., துவக்கப்பட்ட 1972ம் ஆண்டு அக்., மாதம் அ.தி.மு.க.,வில் இணைந்தேன். 54 ஆண்டுகளாக, அந்த கட்சியில் உள்ளேன். வார்டு பிரதிநிதி மற்றும் வார்டு செயலாளர் பதவி வகித்துள்ளேன். எனது மனைவி ராமாத்தாளும், 40 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக உள்ளார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் பணிபுரிந்து வருகிறேன். கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதால், எம்.எல்.ஏ., ஆக இருந்த சீனியம்மாள், கருப்புசாமி உள்பட பலரும் என்னிடம் ஆலோசனை கேட்பது உண்டு.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் மேம்படவில்லை. வாக்களிக்கும் போது, எந்த கட்சி அடித்தட்டு மக்களுக்கு உதவுகிறதோ, அவர்கள் வாழ்க்கை தரம் மேம்பட செய்கிறதோ, அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,விடம் தங்கள் பகுதி மக்களின் கோரிக்கை, அடிப்படை பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தெரிவித்து வரவேண்டும்.
இதனால் நிச்சயம் அந்த பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை தரம் பெரிதாக உயராவிட்டாலும், ஒரே கட்சியில் 54 ஆண்டுகள் பயணித்து வருகிறோம் என்கிற திருப்தி பெருமை உள்ளது. கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
