/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடல்வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா
/
ஆடல்வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா
ஆடல்வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா
ஆடல்வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா
ADDED : ஜன 14, 2025 01:36 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.
மார்கழி மாதத்தில் வரும், திருவாதிரை நட்சத்திர திருநாளாம், ஆருத்ரா தரிசன விழா நேற்று, சிவாலயங்களில் கோலாகலமாக நடந்தது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. நடராஜர், சிவகாமி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர், சிவகாமி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகாமி அம்மையுடன், நடராஜப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில், பட்டி விநாயகரை, சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது.
* ஜோதிநகர் விசாலட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
* நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாங்கல்ய நோன்பு, அலங்கார தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. நேற்று மஹாபிேஷகம், அலங்கார தீபாராதனை,சுவாமி புறப்பாடு மற்றும் பட்டி சுற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ருத்ரலிங்கேஸ்வரருக்கு அபிேஷக பூஜை நடந்தது. நேற்று அலங்கார மகா தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றன. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத் துறைநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
* தேவணாம்பாளையம், அமணீஸ்வரர் கோவிலில், கடந்த 12ம் தேதி, மாலை ஆருத்ரா அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. நேற்று, திருக்கல்யாண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கோமாதா பூஜை, சுவாமி திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம் நடந்தது.
சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாளுக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், தீபாதராதனை நடந்தது. அதன் பின், 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், ேஷக்கல்முடி சிவன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
உடுமலை
கொழுமம் நடராஜர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், ருத்ரப்ப நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் என, உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
திருவாதிரை திருநாள், ஆருத்ரா தரிசன விழாவான நேற்று, சிவாலயங்களில், பக்தர்களின் 'ஓம் நமசிவாயா' கோஷம் முழங்க, நடராஜ பெருமானுக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஆடல்வல்லானின் ஆனந்த அபிேஷகத்தை கண்டு, பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து, சிவகாமி அம்பாளுடன், சிறப்பு அலங்காரத்தில், நடராஜபெருமான் எழுந்தளி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர்.
கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.