ADDED : மார் 19, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
சூலூர்: இருகூர் குடோனில் பதுக்கி வைத்திருந்த ஆளும் கட்சியின் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூலூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனுக்கு இருகூரில், வாக்காளர்களுக்கு வழங்க அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் பதுங்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கி டைத்தது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கலாமணி என்பவருக்கு சொந்தமான குடோனில், வாக்காளர்களுக்கு வழங்க ஆளும் கட்சியினரால் பதுக்கி வைத்திருந்த, 1,000த்துக்கு மேற்பட்ட அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
